கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியனின் 14-வது நினைவு தினம் நேற்று (ஜனவரி 10) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கரூர் பழைய பேருந்து நிலையம் அருகே தமிழக நீதிக்கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த பசுபதி பாண்டியனின் திருவுருவப் படத்திற்கு, தமிழக நீதிக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜெகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.