நிலுவை கோரிக்கைகள்: நில அளவை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

1பார்த்தது
கரூர் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி நவம்பர் 18ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. களப்பணியாளர்களின் பணி சுமையை குறைத்தல், தரம் இறக்கப்பட்ட பதவியை மீள வழங்குதல், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி