தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி (34) என்பவர், தமிழ் புலிகள் கட்சி கூட்டத்திற்காக கரூர் வந்துள்ளார். வேப்பம்பாளையம் சரவணா மில் அருகே வந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள் இரவு அவர் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி முத்துமாரியின் புகாரின் பேரில், கரூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.