கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆண்டிபட்டி நச்சலூர் பகுதி பொதுமக்கள், வருகின்ற மார்ச் 8 ஆம் தேதி தமிழக முதல்வர் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்துள்ளனர். இப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் பாரம்பரிய முறையில் வளர்க்கப்பட்டு வருவதால், அதனை ஊக்கப்படுத்தும் விதமாக அனுமதி வழங்க ஆவண செய்யுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.