கரூரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தும் மக்களுக்கு பாமக ஆதரவு

2பார்த்தது
கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் காதப்பாரை மற்றும் ஆத்தூர் கிராமங்களில் உள்ள இனாம் வகைப்பாட்டு நிலங்களில் வசிக்கும் பொது மக்களை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெண்ணைமலை பகுதியில் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு பாமக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் புகலூர் சுரேஷ் தலைமையில் பாமகவினர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி