2026 தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் பாமக போட்டி: மாநில இளைஞரணி செயலாளர் அறிவிப்பு

1பார்த்தது
கரூர் மேற்கு மாவட்ட பாமக அலுவலகத்தில் மாவட்ட இளைஞரணி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட பாமக மாநில இளைஞரணி செயலாளர் சு.வடிவேலன், 2026 தேர்தலில் பாமக மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாமக தொண்டர்கள் தீவிரமாக பணியாற்றுவார்கள் என்றும் தெரிவித்தார். மேலும், பிப்ரவரி 10ஆம் தேதி சென்னையில் நடைபெறும் இளைஞர் அணி கூட்டம் பாமகவுக்கு திருப்புமுனையாக அமையும் என்றும் அவர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், மாநில துணைத்தலைவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.