சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி, கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் ஈடுபட்டனர். இன்று, போலீசார் உதவியுடன் 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இந்த நடவடிக்கையின்போது போராட்டம் செய்த பெண்களை வலுக்கட்டாயமாக காவல் வேனில் ஏற்றியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. மயக்கம் அடைந்த நபர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.