மாசு தடுப்பு தின விழிப்புணர்வு: பள்ளி மாணவர்கள் ஊர்வலம்

1பார்த்தது
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், டிசம்பர் 2 அன்று காலை 10:30 மணியளவில், உலக மாசு தடுப்பு தினத்தை முன்னிட்டு கரூர் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 80 அடி சாலையில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலம் பஸ் நிலையம் வரை நடைபெற்றது. கரூர் நகர காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ், பள்ளி முதல்வர் ப்ரியதர்ஷினி, எஸ்.ஐ. நாகராஜ் மற்றும் எஸ்.ஐ. பாலசுப்ரமணி ஆகியோர் இந்த நிகழ்வைத் துவக்கி வைத்தனர். மாணவர்கள் மாசு கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், வாசகங்களை உரக்கச் சொல்லியும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி