கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுகா ஒத்தக்கடை துணை மின் நிலையத்தில் நாளை 14-11-25 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. 110/333-11KV ஒத்தக்கடை துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் நெரூர் பாதையில் பராமரிப்பு பணி காரணமாக இந்த மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் ஆர்சி தெரு, அக்ரகாரம், புதுப்பாளையம், மறவா பாளையம், அரங்கநாதன் பேட்டை, காட்டுக்களம், வேடிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும் என மின்செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.