தமிழக அரசின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியம் போட்டிகளின் வெற்றி பெற்ற 27 மாணவ மாணவிகளுக்கு இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் பரிசுகளையும் கேடயங்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.