கரூர் ரயில் நிலையம் முன்பு தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில், தெற்கு ரயில்வே முழுவதும் பென்ஷன் உயர்வு தர மறுக்கும் நிதிச்சட்டம் 2025-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. கரூர் கிளை செயலாளர் நல்லமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு கரூர் மாவட்ட தலைவர் ராஜா முகமது, செயலாளர் சுப்பிரமணியன், ஜி. ஜீவானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.