கரூர் தாந்தோணி அரசு கலைக்கல்லூரியில், கௌரவ விரிவுரையாளர்களுக்கு யுடிசி நிர்ணயம் செய்த ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரி, சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் சுந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 12 மாத கால ஊதியம், சம வேலைக்கு சம ஊதியம், மகப்பேறு விடுமுறை, பணி நிரந்தரம், பணிக்கொடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.