தவெக சார்பில் தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் குளறுபடிகள் நடைபெறுவதை கண்டித்து கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு எஸ். ஜ. ஆர் எதிராக கையில் பதாகைகளை ஏந்தியவாறு கண்டன கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக உயிரிழந்த 41 பேருக்கும் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.