ஒன்றிய மோடி அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் வேல்முருகன், மாநில செயலாளர் சண்முகவள்ளி, சிபிஐஎம் மாவட்ட செயலாளர் ஜோதி பாசு, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜு, விவசாய சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல், குளித்தலை ஒன்றிய செயலாளர் சிவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய சட்ட திருத்த மசோதா மூலம் வேலைவாய்ப்பு சட்டம் சிதைக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.