கரூர் மாவட்டம் வாங்கல் ஒன்றியத்துக்கு உட்பட்ட கடம்பகுறிச்சி பஞ்சாயத்து மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக காவிரி குடிநீர் குழாய் பழுதடைந்துள்ளது. இதனால், 25 அடி உயரத்திற்கு மேல் குடிநீர் சீற்றம் பாய்ந்து வீணாகிறது. பொதுமக்கள் குடிநீர் வீணாவதை சரிசெய்து, பழுதடைந்த குழாயை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.