வெண்ணமலை கோயில் அருகே ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

1பார்த்தது
கரூர் வெண்ணைமலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முன்பாக, பொதுமக்கள் முருகனுக்கு பொங்கல் வைத்து கூட்டு பிரார்த்தனை நடத்தினர். கோயில் அருகே ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தாங்கள் எந்த இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்றும், தகுந்த ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கிருபாவதி முருகையன் மற்றும் காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு முருகனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.