திண்டுக்கல் - மதுரை பிரிவில் வாடிப்பட்டி - சோழவந்தான் - சமயநல்லூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளப் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், குறிப்பிட்ட ரயில் சேவைகள் திருப்பி விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் ரயில் எண். 16788 ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா - திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ், 31.07.25, 07.08.25 & 14.08.25 ஆகிய தேதிகளில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ராவிலிருந்து புறப்பட்டு, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் மாற்று நிறுத்தம் அளிக்கப்படும்.
இதனால், திண்டுக்கல், மற்றும் கொடைக்கானல் சாலை, மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் இந்த ரயில் நிறுத்தப்படும். ரயில் எண். 16788 ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா - திருநெல்வேலி (காட்பாடி, சேலம், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி வழியாக) வாராந்திர எக்ஸ்பிரஸ், ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ராவிலிருந்து வியாழக்கிழமைகளில் 22.30 மணிக்குப் புறப்பட்டு, சேலம், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி வழியாக ஞாயிற்றுக்கிழமை 18.00 மணிக்குத் திருச்சுழிக்கு சென்றடையும் என கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.