கரூரில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி

213பார்த்தது
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கிராம குடிநீர் திட்டத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் காணொளி வாகனத்தை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று துவக்கி வைத்தார். 'தாகம் தீர்க்கும் குடிநீர், தரமான குடிநீர்' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி மாவட்ட விளையாட்டு அரங்கம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு வடிகால் வாரிய பொறியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி