கரூர் மாவட்டத்தில், எஆர்எஸ் கல்வி நிலையம் மற்றும் லோட்டஸ் கண் மருத்துவமனை ஊழியர்கள் சார்பில், குடிபோதை ஒழிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கரூர் மாவட்ட நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியை, நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் சமீராபானு மேற்பார்வையில், மீனாட்சி பல்மருத்துவமனை மருத்துவர் பரத் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட உதவி காவல் ஆய்வாளர் விஸ்வநாதன், கல்லூரி தலைவர் டாக்டர் அபுல்ஹசேன், மற்றும் டாக்டர் பரத் ஆகியோர் போதை பழக்கத்தின் தீங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணி மாரியம்மன் கோவில், ஜவகர் பஜார் வழியாக எஆர்எஸ் கல்வி நிலையம் வரை சென்றது.