கரூர் பசுபதிபாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், தனது பழைய பேருந்துக்கு வரி செலுத்த கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தருமானந்தத்தை அணுகியுள்ளார். வரித்தொகையைக் குறைத்துத் தருவதாகக் கூறி, தருமானந்தம் ₹5000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேந்திரன், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் உதவியுடன் ரசாயனம் தடவிய பணத்தை அதிகாரியிடம் கொடுத்தபோது, தருமானந்தம் கையும் களவுமாகப் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.