கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் தங்கவேல் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ முன்னிலையில், புகலூர் வட்டம் க. பரமத்தி ஊராட்சி ஒன்றிய தென்னிலையில் வருவாய் ஆய்வாளர் குடியிருப்புடன் கூடிய அலுவலகக் கட்டிடம் ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் திறக்கப்பட்டது. மேலும், திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கியின் தென்னிலை கிளையையும் திறந்து வைத்தார். தொடர்ந்து, மூன்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள் மற்றும் பயிர் கடன்கள் என மொத்தம் 104 பயனாளிகளுக்கு ரூ. 1.04 கோடி மதிப்பீட்டில் கடன் உதவிகளை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.