கரூர் எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடிகள் தஞ்சம்

857பார்த்தது
கரூர் மாவட்டம், கொளந்தானூர் பகுதியைச் சேர்ந்த வீரமுரசு மற்றும் பசுபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த மஞ்சு ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இரு குடும்பத்தினரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரும் இன்று காலை தாந்தோன்றிமலை பெருமாள் கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி கரூர் எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்து தஞ்சம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி