கரூர் கோயில் பூசாரிகளுக்கு ரூ.6000 மாத ஊதியம்

395பார்த்தது
கரூர் கோயில் பூசாரிகள் நல சங்கம் சார்பில் 21 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் மாவட்ட பூசாரிகள் மாநாடு நடைபெற்றது. மாநிலத் தலைவர் வாசு, பூசாரிகளுக்கு மாத ஊதியத்தை ரூ.6000 ஆக உயர்த்தவும், நல வாரியத்தில் உறுப்பினர்களை நியமிக்கவும் கோரிக்கை விடுத்தார். மேலும், அனைத்து பூசாரிகளுக்கும் மாத ஊதியம், துறை கட்டுப்பாட்டில் பணிபுரியும் பூசாரிகளுக்கு ஓய்வூதியம், பணி நிரந்தரம் மற்றும் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பணியாற்றும் பூசாரிகளுக்கு மாதம் ரூ.6000 வழங்க வலியுறுத்தினார்.