கரூர் மண்மங்கலம் காதப்பாறை, வெண்ணைமலை பகுதியில் இனாம் நிலங்களுக்கு ரயத்துவாரி பட்டா வழங்கப்பட்டு, சுமார் 1200 குடும்பத்தினர் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, இனாம் ஒழிப்பு சட்டத்தின்கீழ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என பாமக கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்ட செயலாளர் பிரேம்நாத் நேற்று செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்தார்.