கரூரில் கார் மோதி துப்புரவு பணியாளர் படுகாயம்

6பார்த்தது
கரூரில் கார் மோதி துப்புரவு பணியாளர் படுகாயம்
கரூர் வெள்ளியணை தாலியப்பட்டி காலனியைச் சேர்ந்த 65 வயதான துப்புரவு பணியாளர் சின்னார், நேற்று வெள்ளியணை சாலையில் தனது டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்துடன் நடந்து சென்றபோது, சுரேந்தர் பிரசாத் ஓட்டி வந்த கார் மோதி படுகாயமடைந்தார். அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சின்னாரின் பேரன் சந்தோஷ் அளித்த புகாரின் பேரில், வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி