கரூர்: சங்கடஹரா சதுர்த்தி விழா; விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்

59பார்த்தது
பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு கணபதி ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நேற்று (மார்ச் 17) நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தேர் வீதி அருள்மிகு விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 

நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் கணபதிக்கும், மூலவர் கணபதிக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர் பஞ்சாமிர்தம், தேன், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலை அணிவித்த பிறகு ஆலயத்தில் சிவாச்சாரியார் பூக்களால் நாமாவளிகள் கூறினார். 

பின்னர் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய் வேத்தியம், சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த சங்கடஹர சதுர்த்தி விழாவில் ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி