கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா மூலிமங்கலம் அடுத்த நானவாக்கல் மேடு பகுதியைச் சேர்ந்த பாண்டியன் (36) என்பவர் நேற்று வேலாயுதம்பாளையம் சாலையில் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த கார் மோதியதில் அவரது இடது கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. அவர் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளார். வேலாயுதம்பாளையம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.