கரூர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி. ஆர். இளங்கோ, மாணிக்கம், சிவகாமசுந்தரி மற்றும் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.