கரூர்: முருங்கை மதிப்பு சேர்க்கை மையம் செயல்படத் தொடக்கம்

598பார்த்தது
கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் தொகுதிக்கு உட்பட்ட மேட்டு மகாதானபுரம் கிராமத்தில், முருங்கை மதிப்பு சேர்க்கை செயலாக்க மையம் இன்று (பிப்ரவரி 20) திறக்கப்பட்டது. கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி இந்த மையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், ஒன்றிய செயலாளர்கள் கட்டளை ரவி ராஜா, முத்துக்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மையம் முருங்கை விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் ஈட்டித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி