கரூர்
திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ, கரூர் மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகில், பொதுமக்கள் கோடை வெப்பத்தை தணிக்க நீர்மோர் பந்தலை இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கரூர் மாநகர, நகர ஒன்றிய
திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த பந்தல் மூலம் பொதுமக்கள் கோடை வெப்பத்தில் இருந்து நிவாரணம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.