கரூர் மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த செந்தில்பாலாஜி, தானும் பங்கேற்பு

3பார்த்தது
கரூர் மாநகராட்சியில் இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ), கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா் சங்கம், அனைத்து வணிகா்கள் சங்கம் சாா்பில், 2030-ஆம் ஆண்டுக்குள் கரூரின் வா்த்தக இலக்கு ரூ.50 ஆயிரம் கோடியை அடையும் வகையில் சிஐஐ-ன் 2030 விஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இன்று கரூரில் 5 மற்றும் 10 கிலோ மீட்டர் மாரத்தான் மற்றும் 3 கிலோ மீட்டர் அதிவேக நடைப் போட்டி நடைபெற்றது. கரூர் திருவள்ளுவா் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை முன்னாள் அமைச்சர், கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். மேலும், 3 கிலோ மீட்டர் அதிவேக நடைப் போட்டியில் அவரும் கலந்துகொண்டு நடந்தார். ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ், முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசு, பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி