கரூர் ரயில்வே காலனி ஸ்ரீ தென்முக ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று (மே 22) பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. எண்ணெய்க் காப்பு, பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. வண்ணமாலை, பட்டாடைகள் அணிவித்து, சிவாச்சாரியார் திருநாமங்கள் முழங்க சஷ்டி பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.