கரூர் மாவட்டம் வெண்ணைமலையில் பெண்கள் படும் இன்னல் மற்றும் போராட்டம் குறித்து எடுத்துக் கூறும் வகையில், பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணியை கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கொங்கு நா.பிரேம்நாத் சந்தித்து மனுக்களை வழங்கினார். இந்த நிகழ்வில், கரூர் மக்களுக்கு பசுமை தாயகம் உறுதுணையாக இருக்கும் என சௌமியா அன்புமணி தெரிவித்தார்.