கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

0பார்த்தது
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவிலில் இன்று (ஜனவரி 10) மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாலை எம்பெருமான் கால பைரவருக்கு தயிர், பால், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி