கார்த்திகை நட்சத்திர சிறப்பு பூஜைகள்: அருள்மிகு கல்யாணபசுபதீசுவரர் கோயிலில் அன்னதானம்

353பார்த்தது
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அருள்மிகு கல்யாணபசுபதீசுவரசுவாமி திருக்கோயிலில் இன்று ஐப்பசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு எம்பெருமான் முருகனுக்கு காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடு செய்யப்பட்டு மாடவளாக வீதியில் திருவீதி உலா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.