கரூர் தனியார் திருமண மண்டபத்தில், பாரதியார் மற்றும் குடியரசு தின மாநில அளவிலான ஜூடோ, கேரம் மற்றும் சாலையோர மிதிவண்டி போட்டி கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதில் ஜூடோ போட்டியில் 2065 பேர், கேரமில் 714 பேர், மிதிவண்டி போட்டியில் 258 பேர் என மொத்தம் 3037 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்ட அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.