கரூர் தனியார் கூட்டரங்கில் தமிழர் தேசம் கட்சி மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கட்சி நிறுவனத் தலைவர் செல்வகுமார் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் திருச்சியில் நடைபெறவிருக்கும் முத்தரையர் அரசியல் அதிகார அமைப்பு மீட்பு மாநாடு குறித்து மாவட்ட மாநில நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன், மாநில பொதுச்செயலாளர் தளவாய் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.