கரூர் மாவட்ட பொறியியல் கல்லூரியில், தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு துறை சார்பில் "அறிவின் வழியே மானுட
விடுதலை" என்ற தலைப்பில் மாநில திராவிடர் கழக துணை செயலாளர் மதிவதனி சொற்பொழிவாற்றினார். இந்நிகழ்வில், புத்தகங்கள், நான் முதல்வர் திட்டம், வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் போன்ற அரங்குகள் அமைக்கப்பட்டன. உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் மாவட்ட வருவாய் அலுவலர் விமல் ராஜ் வெளியிட, கலால் துறை இணை ஆணையர் முருகேசன் பெற்றுக் கொண்டார். 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.