கரூரில் தமிழ் கனவு நிகழ்ச்சி, நெல்லை ஜெயந்தா சிறப்புரை

கரூர் மாவட்டத்தில் இரண்டாம் நிகழ்வாக, தனியார் பொறியியல் கல்லூரி கலையரங்கத்தில் இன்று 'மாபெரும் தமிழ் கனவு' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சொற்பொழிவாளர் கவிஞர் நெல்லை ஜெயந்தா, 'காலத்தை வென்ற கவிஞர்கள்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட வருவாய் அலுவலர் விமல் ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.