கரூர்: டாஸ்மாக் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

1பார்த்தது
கரூர் மாவட்டம் தொழில்பேட்டையில் உள்ள டாஸ்மாக் வாணிபக் கழகம் முன்பு, டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் (CITU) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கட்கிழமை (24-11-25) காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காலி மது பாட்டில்களை சேகரிக்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும், பணி நேரத்தை 8 மணி நேரமாக மாற்ற வேண்டும், பணிச்சுமையைக் குறைத்து வாழ்வாதாரத்தைப் பாதிக்காமல் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதில் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் தண்டபாணி உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.