கரூர்: சிக்னல் செய்யாமல் திருப்பியதால் டூவீலர் மோதி விபத்து

69பார்த்தது
முன்னாள் சென்ற டாட்டா ஏஸ் வாகனம் சிக்னலை வெளிப்படுத்தாமல் திடீரென வலது புறம் திருப்பியதால் பின்னால் வந்த டூவீலர் மோதி விபத்து இளைஞர் படுகாயம். கரூர் மாவட்டம், புலியூர் சிமெண்ட் சாலை அருகே பழைய காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் வயது 29. இவர் பிப்ரவரி 19ஆம் தேதி மதியம் 12 மணி அளவில், கரூர்- திருச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். 

இவரது வாகனம் காந்திகிராமம் டபுள் டேங்க் அருகே சென்றபோது, இவருக்கு முன்பாக ஈரோடு மாவட்டம், திண்டல் பகுதியைச் சேர்ந்த கோகுல்நாத் வயது 25 என்பவர் வேகமாக ஓட்டிச் சென்ற டாட்டா ஏஸ் வாகனத்தை, எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல், திடீரென வலது புறம் திருப்பியதால், பின்னால் டூவீலரில் வந்த தினேஷ் குமாரின் வாகனம் டாட்டா ஏஸ் வாகனத்தின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தினேஷ் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக தினேஷ் குமார் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டாட்டா ஏஸ் வாகனத்தை சாலை விதிகளை மதிக்காமல் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கோகுல்நாத் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தாந்தோணி மலை7 காவல்துறையினர்.