கரூரில் மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

1பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நெய்தலூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (35), வாங்கபாளையம் பகுதியில் தங்கி, கரூர் வெண்ணமலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் அதே பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுமியிடம் கடந்த 4 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மாணவி 1098 என்ற அவசர உதவி எண்ணில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலரின் புகாரின் பேரில், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியர் கார்த்திகேயனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி