கரூர்: கோயில் நில ஆக்கிரமிப்பு புகாரில் சிக்கிய திமுக பிரமுகர்

641பார்த்தது
புகலூர் தாலுகாவில் உள்ள நொய்யல் செல்லாண்டியம்மன் திருக்கோயில் பூசாரிக்கு வழங்கப்பட்ட 84 ஏக்கர் நிலத்தை திமுக கிளைச் செயலாளர் மோகன்ராஜ் ஆக்கிரமிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதைத் தட்டிக் கேட்ட பூசாரி அப்பன் சம்பத்தை மோகன்ராஜ் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இது தொடர்பாக வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், உரிய நடவடிக்கை கோரி இந்து சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தீனதயாளன் தலைமையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி