கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு தொடர்பாக, சிபிஐ அலுவலகத்தில் நான்காவது நாளாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் என எட்டு பேர் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அணியின் திருச்சி மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் அரசு உள்ளிட்ட மூன்று நிர்வாகிகள் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். அவர்கள் கருப்பு பை ஒன்றை எடுத்துச் சென்றுள்ளனர். அதில் சிசிடிவி வீடியோ ஆதாரங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.