கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், தோட்டக்குறிச்சி கிராமத்தில் உள்ள அருள்மிகு அரசமரத்தடி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா ஐப்பசி 30, 16.11.2025, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.15 மணி முதல் 7.45 மணிக்குள் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ மலையப்ப சாமி மற்றும் இன்ஜினியர் கார்த்திகேயன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர்.