கரூர் அதிமுக செயலாளர் கமலக்கண்ணன் செய்தியாளர் சந்திப்பில்,
பதவி ஆசைப்பட்டு துரோகம் செய்த முன்னாள் மாவட்ட செயலாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்தைப் பூட்டி சாவியை எடுத்துச் சென்றதாகக் குற்றம் சாட்டினார். இது கழகத்தின் பாரம்பரிய வழிமுறைக்கு முற்றிலும் மாறான, கண்டிக்கத்தக்க செயல் என்றும், இத்தகைய துரோக மனப்பான்மையையும், ஜனநாயக விரோத நடவடிக்கையையும் கடுமையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் கரூர் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.