கரூர் மாவட்டம் க. பரமத்தி மற்றும் குளித்தலை காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வீரமணி (48), காமராஜ் (46) மற்றும் தேவராஜ் (75) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். நெடுங்கூர் டாஸ்மாக் பிரிவு அருகே வீரமணி, மலையப்பநகர் வாய்க்கால அருகே காமராஜ் மற்றும் தேவராஜ் ஆகியோர் மது விற்பனை செய்தபோது போலீசார் அவர்களைக் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 42 மது பாட்டில்கள் மற்றும் ரூ. 320 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.