கரூர் மண்மங்கலம் பெரியாண்டார் கோவில் அருகே நேற்று தனபால் என்பவர் பைக்கில் சென்றபோது, எதிரே வந்த ராஜேஷ் என்பவர் வர்கீஸுடன் பைக்கில் மோதியதில் மூவரும் படுகாயமடைந்தனர். தனபால் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அளித்த புகாரின் பேரில் கரூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.