கரூர் அட்லஸ் கலையரங்கத்தில் நேற்று நடைபெற்ற அமமுக மாவட்ட செயலாளர் தங்கவேல் மகள் காருண்யா - லத்தீஷ் கன்பத் திருமண வரவேற்பு விழாவில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டனர். இருவரும் சிறிது நேரம் ஒன்றாக அமர்ந்து பேசிய நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தினகரன், அண்ணாமலை அவர்களின் உறவினர் திருமணத்தில் நலம் விசாரித்ததாகவும், அரசியல் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்தார். அமமுகவின் நிலைப்பாடு குறித்து சிறிது காலம் பொறுத்திருந்தால் அனைத்தும் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.