கரூர், ஆட்டையாம்பரப்பு பகுதியில் இன்று காலை 5.30 மணி அளவில் TN 90 SJ7918 என்ற எண்ணுள்ள கார், இருசக்கர வாகனத்தில் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர். நெடுஞ்சாலைத்துறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.